வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்

வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்

வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி நடைபெறுகிறது. முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலும், அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான அறையிலும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தினை கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கூறினார்.

Tags

Next Story