அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் செப்பு தகடு மாயம்

அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் செப்பு தகடு மாயம்

லால்குடி அருகே சவுந்தர நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் செப்பு தகடு மாயமாகியுள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஆய்வு செய்தார்.


லால்குடி அருகே சவுந்தர நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் செப்பு தகடு மாயமாகியுள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் சவுந்தர நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் இருந்த பழமையான அன்பில் தகடு என அழைக் கப்படும் செப்பு தகடு மாயமானது.தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழு தப்பட்ட இந்த செப்பு தகட்டில் கி.பி 4 நூற்றாண்டில் மன்னர் சுந்தர சோழனால் அவரது மந்திரிக்கு வழங்கிய 70 ஏக்கர் நிலம் மற்றும் மாதவபட்டர் முன்னோர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செய்த தொண்டுகள் குறித்து விபரங்கள் இருந்தது.

இது குறித்து போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் நேற்று லால்குடி அருகே அன்பில் சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர்ர கோயிலில் ஆய்வு செய்தனர். முன்னதாக மூலவர் பிரம்மபுரீஸ்வரர், சவுந்தரநாயகி அம்பாள் ஆகியோரை வழிபட்டனர். பின்னர், மூலவர் சன்னதியில் உள்ள சுவாமி விக்கிரகங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஆய்வு செய்தனர். மேலும், ஆலய அர்ச்சகர் முத்துசாமியிடம் விசாரித்தனர்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில் செப்பு தகடுகள் கோர்க்கப்பட்ட ஒரு வளையம். அந்த வளையத்தில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட தகடுகள் இருக்கும். அந்த தகடு சிலைகளில் மாமன்னர் சுந்தரச்சோழன் கி.பி 961ல் அவரது மந்திரிக்கு நிலத்தை தானமாக வழங்கிய விபரம் மற்றும் மாதவபட்டர் முன்னோர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செய்த தொண்டுகள் குறித்த விபரங்கள் அதில் உள்ளது. இந்த செப்புதகடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மியூசியத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் 1957ம் ஆண்டு இந்த தகடு அன்பில் கோயிலில்தான் இருந்துள்ளது. இதை மைசூரில் உள்ள தொல்லியல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து அதை படிமனாக எடுத்துச் சென்றுள்ளனர். 1957-ம் ஆண்டுக்கு பிறகு இந்த செப்புதகடு எங்கு சென்றது என்பது தெரியவில்லை. விலை மதிப்பில்லாத இந்த தகட்டை படிமம் எடுத்துச் சென்ற நபர்களில் ஒருவர் கூட தற்போது உயிரோடு இல்லை. எனவே இந்த தகடு எங்குள்ளது என்று தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Tags

Next Story