கொத்தமல்லி விலை கிடுகிடுவென உயர்வு

கொத்தமல்லி விலை கிடுகிடுவென உயர்வு

வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொத்தமல்லி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொத்தமல்லி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொத்தமல்லி விலை கிடுகிடுவென உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிக அளவில் கொத்தமல்லி புதினா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் வெயில் தாக்கத்தின் காரணமாக கொத்தமல்லி சாகுபடி குறைந்துள்ளது. அதனால் தற்போது கொத்தமல்லி தட்டுப்பாடு காரணமாக கொத்தமல்லி விலை கிடுகிடுவினை அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு கட்டு கொத்தமல்லி 50 ரூபாய் முதல் 90 ரூபாய் விற்க்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொத்தமல்லிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story