சூரைக்காற்றில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கொடிக்காய் மரங்கள் சேதம்

சூரைக்காற்றில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கொடிக்காய்  மரங்கள் சேதம்
கொடிக்காய் மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம்
விருதுநகரில் சூரைக்காற்றில் ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான, கொடிக்காய் மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தது.

விருதுநகரில் சூரைக்காற்றில் ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான, கொடிக்காய் மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் - விவசாயிகள் வேதனை...* விருதுநகர் அருகே மருளூத்து கிராமத்தில் வீரபாண்டியன் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கொடிக்காய் மரங்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த சூறைக்காற்றில் செல்லப்பாண்டி என்பவரின் கொடிக்காய் தோட்டத்தில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கொடிக்காய் மரங்கள் வேரோடு சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனால் தனக்கு 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் . சுமார் 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது முற்றிலும் சேதமடைந்திருப்பதால் இதை அகற்றுவதற்கே 5 லட்சம் வரை செலவாகும் எனவும்,

மீண்டும் கொடிக்காய் விவசாயம் செய்ய இன்னும் 20 ஆண்டு காலம் ஆகும் எனவும் அதுவரை தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளாதாகவும், ,ஆகையால் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்க்கை விடுத்துள்ளனர்.

இதே போல் பால்சாமி என்பதற்கு சொந்தமான ஓட்டு வீட்டில் நேற்று மாலை வீசிய பலத்த சூறைக்காற்றில் அவர் குடியிருந்த ஓட்டு வீட்டின் மேற்க்கூரையும் தூக்கி விசப்பட்டதாகவும் கோரிக்கை வைத்து உள்ளனார்

Tags

Next Story