தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை!

தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை!

திருப்பூர் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த மாநகராட்சி பள்ளிகளில் மாநகராட்சி ஆணையாளர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.


திருப்பூர் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த மாநகராட்சி பள்ளிகளில் மாநகராட்சி ஆணையாளர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

திருப்பூர் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த மாநகராட்சி பள்ளிகளில், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய 205 மாணவர்களில் 100 பேரும், 134 மாணவிகளில் 68 பேரும் தோல்வி அடைந்தனர். மொத்தமாக பள்ளியில் 168 பேர் தோல்வி அடைந்தனர். இதேபோன்று மாநகரின் பல்வேறு பள்ளிகளில் பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமை வகித்தார்.

அனைவரது உயர்கல்வியை உறுதி செய்வதுடன், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு நடத்தப்படும் துணைத்தேர்வில் பங்கேற்று உடனடியாக தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், மாநகராட்சி ஆணையர் வழங்கினார். மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறும்போது, ”கல்வியே வாழ்வின் எதிர்காலம். இன்றைக்கு பள்ளி பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைபவர்கள், இடைநிற்றல் காரணமாக பல்வேறு வழிகளில் வழிமாறுகின்றனர். இவற்றை தவிர்க்க கட்டாயம் அனைவருக்குமான அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் பங்கேற்றவர்கள் பேசும்போது, “பள்ளியில் உட்கட்டமைப்புகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை உள்ளன. இதனால் தேர்ச்சி விகிதம் குறைகிறது. அது போல் உள்ள மாநகராட்சி பள்ளிகளை கணக்கெடுத்து, போதிய ஆசிரியர்களை நியமித்து, உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி தேவையான ஏற்பாடுகள் செய்துதர வேண்டும். அதேபோல் மாணவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகும் பழக்கம் திருப்பூரில் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் தொடர் நல்வழி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒழுங்கீன செயல்பாடுகளை கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அவசர ஆலோசனைக்கூடத்தில் மாநகராட்சி ஆணையர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story