பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையர்!

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையர்!

கோவை அருகே கணேசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாணவர்களுடன் கலந்துரையாடியாடினார்.

கோவை அருகே கணேசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாணவர்களுடன் கலந்துரையாடியாடினார்.

கோவை:தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.தெற்கு மண்டல வார்டு எண் 97க்கு உட்பட்ட லென்ஸ்கார்ட் பகுதியில் 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தார் சாலை பணிகளையும் பிள்ளையார்புரம் வார்டு எண் 96க்கு உட்பட்ட லோகநாதபுரம் பகுதிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் 97வது வார்டுக்கு உட்பட்ட செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி 95வது வார்டுக்கு உட்பட்ட எம்.பி இட்டேரி நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் வார்டு எண் 99க்கு உட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் சாலை மாநகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்றவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார். முன்னதாக 95வது வார்டு குறிச்சி பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பார்வையிட்ட அவர் தரமான முறையில் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறதா என்பதனையும் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

வார்டு எண் 100க்கு உட்பட்ட கணேசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாணவ மாணவிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் வார்டு பகுதிகளில் பயன்படுத்த உள்ள பாதாள சாக்கடை மூடிகள் இருப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் 94 ஆவது வார்டுக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் 97வது வார்டு ஐயப்பா நகர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை மேயர் வெற்றிச்செல்வன், துணையாணையாளர் சிவக்குமார், தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story