சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி தீர்மானம்

சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி தீர்மானம்

பைல் படம் 

சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க 15 நாட்கள் கெடு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை மற்றும் பொது இடங்களில் கொண்டியாய் திரியும் கால்நடைகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு துணை விதிகள் இயற்றப்பட்டு மதுரை மாநகர் மாமன்ற தீர்மானம் எண்.401 நாள் 12.02.2024ன்படி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வரைவு துணை விதிகள் மதுரை மாநகராட்சியின் வலைதளம் https://shorturl.at/nme9M (சேவைகள்) தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு உள்ள வரைவு துணை விதிகள் தொடர்பான ஆட்சேபனை மற்றும் கருத்துகள் ஏதேனும் இருந்தால் இச்செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 தினங்களுக்குள் கடிதம் மூலமாகவோ அல்லது நேரில் ஆணையாளர், மதுரை மாநகராட்சி அவர்களுக்கு தெரிவிக்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story