மாநகராட்சி பள்ளி வளாக பணிகள் - மேயர் ஆய்வு

X
மேயர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தாழ்வான இடங்களை ஈரக் கலவை மூலம் நிரப்பும் பணியை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அய்யாச்சாமி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள தாழ்வான இடங்களை ஈரக் கலவையால் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நேதாஜி நகா், இந்திரா நகா் பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறுகையில், பெருமழை வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது மாநகா் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அமைச்சா்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினா், மின்வாரியத் துறையினா், அரசு அலுவலா்கள், தூய்மைப்பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினா் கீதா முருகேசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
Next Story
