ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும்: மத்திய அமைச்சர்

ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும்: மத்திய அமைச்சர்

வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர் 

நாடு இல்லா இருக்க வேண்டுமானால் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என ஒசூரில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் C.நரசிம்மன் அவர்களை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசுகையில் தெலுங்கு மொழியில் பேச வேண்டுமென வேட்பாளர் கேட்டுக்கொண்டதின் பேரில் தெலுங்கில் ஆரம்பித்தவர் தடுமாறியதால் மீண்டும் தமிழ் மொழியில் பேச்சை மாற்றினார்.. மழைக்கால,குளிர்க்கால பறவை போல மோடி வருவதாக முதல்வர் விமர்சிக்கிறார். அந்த வார்த்தையே தவறு இந்திய நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்,

ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தபோது பல கோடி ரூபாய் திட்டங்களை கொடுத்து செல்வார், தொழில்களை அவர் கொடுத்து சென்றால் கமிஷன் பெறுவதற்காக இவர்கள் வருகிறார்கள்.. குடி பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை பாரக்கிறோம்.. குடி பழக்கத்தில் அடிமையாகாமல் தொழில்கொடுத்து குடும்பத்தை காப்ப வேண்டும் என்கிற செயலில் இருக்கும்போது அவர்களின் ஒரு குடும்பம் வாழ வேண்டுமென்பதற்காக போதை பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களை பாழாக்கும் குடும்பத்தை மீண்டும் ஒருமுறை கூட தேர்ந்தெடுக்க கூடாது ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பில் இருந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரம் உள்ளன.. போதை பொருட்கள் மூலமாக கோடி கோடியாய் சம்பாதித்து தங்களது குடும்பம் வாழ பார்க்கிறார்கள்.

போதை பொருட்கள் ஆதாயத்தால் எந்த குடும்பமும் வாழ்ந்ததில்லை.. போதை பொருட்களின் ஆதாயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் குடும்பத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும்.. குடி பழக்கத்தால் தடுமாறும் நிலையில் போதை பொருட்களை கொண்டு வந்த குடும்பத்தை நிற்க வைத்து 4 கேள்விகள் கேட்க வேண்டும் தேர்தல்,

அன்று நமது குடும்பத்தில் உதயமில்லாமல் இருட்டை கொண்டுவந்த திமுகவை நிராகரிக்க வேண்டும் உதயசூரியம் அவர்களுக்கு குடும்பத்திற்கு மட்டும் தான் உதிக்கிறது. மீண்டும் தெலுங்கில் பேசிய அமைச்சர்: நாடு நல்லா இருக்க வேண்டுமானால், ஊழல் இல்லாத அரசும், அரசியல்வாதி அமைய வேண்டும்.

அது நம் பிரதமர் மோடியை போல இருக்க வேண்டும் 2047க்குள்ளாக இந்தியா நாடு, அமெரிக்கா, ஜப்பான்,கொரியா போன்று உருவாகும் வேலை வாய்ப்புகளுக்காக பிற நாடுகளுக்கு செல்லும் இளைஞர்களுக்கு இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு வெளிநாடுகளை போன்ற ஊதியமும் கிடைக்கும் என்றார்..

Tags

Next Story