திருச்செங்கோட்டில் அழகு கலை பயிற்சி துவக்கம்

திருச்செங்கோட்டில் அழகு கலை பயிற்சி துவக்கம்

 பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த நகர மன்ற தலைவர் நளினிசுரேஷ் பாபு

திருச்செங்கோட்டில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் அழகு கலை பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வீரராகவர் முதலியார் தெரு பகுதியில் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய அரசின் skill India கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக படிக்காத மற்றும் படித்து வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பயன் பெரும் வகையில் அழகுக்கலை தொழில் பயிற்சி வகுப்பினை நகர மன்ற தலைவர் நளினிசுரேஷ் பாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி உலகநாதன் மற்றும் பயிற்சி வகுப்பு நடத்தும் சங்கீதா மற்றும் வகுப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் உடன் இருந்தனர்.



Tags

Next Story