பருத்தி ஏலம்

பருத்தி ஏலம்

பருத்தி ஏலம் 

அவிநாசியில் ரூ. 7 1/2 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அந்த வகையை நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 384 பருத்தி மூட்டைகள் கொண்டவரப்பட்டன.

இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.7000 முதல் ரூ. 7906 வரையிலும் மற்ற ரகப்பருத்தி குவிண்டால் ரூ.2000 முதல் ரூ. 3500 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.7.62 லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story