அரூரில் ரூ.41 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.41 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ. 41 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று மாலை பருத்தி ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கூட் ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்தவாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 306 விவசாயிகள் 1,316 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வந்தனர். இந்த வாரம்ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.6,709 முதல் ரூ.7,499 வரை ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் ரூபாய் 41 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது என்று செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story