கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ 17 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ 17 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள் 

கொங்கணாபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது.

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 17 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏல விற்பனையானது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது.

சனிக்கிழமை நேற்று நடைப்பெற்ற பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 35 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 650 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 150 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது.

BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 7550 முதல் அதிக பட்சமாக ரூபாய் 8550 வரையிலும், DCH ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 9000 முதல் அதிக பட்சமாக ரூபாய் 11990 வரையிலும் கொட்டு ரக பருத்தி ரூ 4450 முதல் ரூ 5650 விலை விற்று தீர்ந்து மொத்தம் ரூ17 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 13.04.24 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்.டுள்ளது.

Tags

Next Story