மல்லசமுத்திரத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

பருத்தி 

மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.20லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 800 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு ரூ.7290 முதல் ரூ.7970 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4230முதல் ரூ.5480 வரையிலும் என மொத்தம் ரூ.20லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 13ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Tags

Next Story