அரூர் கூட்டுறவு சங்கத்தில் 26 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஆர். சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை ஏலம் போனது.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல் லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட் ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.
இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தில் 210 விவசாயிகள் 700 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர். சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது என்று செயலர் அறிவழகன் தெரிவித்தார்.
Next Story