இரண்டு லட்ச ரூபாய்க்கு பருத்தி ஏலம்

இரண்டு லட்ச ரூபாய்க்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 100 பருத்தி மூட்டைகள் ரூ. 2லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன.  

மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 100 பருத்தி மூட்டைகள் ரூ. 2லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 100 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பி.டி., ரகம் ரூ.7310 முதல் ரூ.8090வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4100முதல் ரூ.4800 வரையிலும் என மொத்தம் ரூ.2லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 22ஆம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்

Tags

Next Story