கும்பகோணத்தில் பருத்தி ஏலம்   

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்      

பருத்தி ஏலம்

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 7,519-க்கு ஏலம் போனது.   
கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 7,519-க்கு ஏலம். தஞ்சாவூா் விற்பனைக் குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநா் வித்யா தலைமையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலையில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 2,054 குவிண்டால் பருத்தி வரப்பெற்றது. ஏலத்தில் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7,519, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,469, சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,889 என கொள்முதல் செய்யப்பட்டது. ஏலத்தில் கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ரூட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதேசம், மகுடஞ்சாவடி, தேனி, விருதுநகா், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனா். கும்பகோணம் விற்பனை கூட அலுவலா்கள் மற்றும் வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags

Next Story