பருத்தி சாகுபடி பண்ணை வகுப்பு
.சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள புத்தூர் ஊராட்சியில் வேளாண்மை துறையில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் பண்ணை முதலாவது வகுப்பு வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா தலைமையில் நடைபெற்றது.உழவியல் துறை நிபுணர் மெசியா நவீன்தாஸ் பருத்தி பயிர் சாகுபடிக்கு ஏற்ற பருவம்.விதைத்தேர்வு மற்றும் சாகுபடிக்கு நிலம் தயாரித்தல் குறித்து பேசினார்.
வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள். மானிய விவரம் குறித்து பேசினார்.துணை வேளாண்மை அலுவலர் மணவழகன் விதைநேர்த்தி, நுண்ணணூட்டங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி அட்மா திட்ட செயல்பாடுகள், மண்வளமேலாண்மை தொழில்நுட்பம் குறித்து பேசினார்கள் இந்தபண்ணை வகுப்பில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ். முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர்.