நாமக்கல்லில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

நாமக்கல்லில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

சாலைமறியல்

நாமக்கல் மாவட்டம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனைக்கு வந்திருந்த பருத்திகள் நனைந்ததால் எடைபிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்தை அடுத்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

நாமக்கல்லில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் செவ்வாய்கிழமை நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். நேற்று காலை நாமக்கல் நகரில் சாரல் மழை பெய்தது, இதனால் விவசாயிகள் கொண்டு வந்திருந்த ஒரு சில பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து இருந்தது.

பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து இருந்ததை காரணம் காட்டி மூட்டை ஒன்றுக்கு மூன்று கிலோ எடை பிடித்தம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டி, எடை பிடித்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி பருத்தி விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அதிகாரிகளிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story