பருத்தி சந்தை வர்த்தகம் ரத்து

பருத்தி சந்தை வர்த்தகம் ரத்து

பைல் படம் 

கள்ளக்குறிச்சி பருத்தி வாரசந்தை வர்த்தகத்தை மேலாண் இயக்குனர் ரத்து செய்தார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சு மூட்டைகள் மழையில் நனைந்து விடும் என்பதால் விவசாயிகள் பலரும் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வரவில்லை. கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தைக்கு நேற்று 100க்கும் குறைவான மூட்டைகளே வரத்து இருந்தது. இதனால் பருத்தி வார சந்தையின் வர்த்தகத்தை மேலாண் இயக்குனர் செந்தில் ரத்து செய்து அடுத்த வாரத்திற்கு மாற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story