கள்ளக்குறிச்சி வார சந்தையில் ரூ.10.27 லட்சம் பஞ்சு கொள்முதல்

கள்ளக்குறிச்சி வார சந்தையில் ரூ.10.27 லட்சம் பஞ்சு கொள்முதல்

கள்ளக்குறிச்சி வார சந்தையில் ரூ.10.27 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி வார சந்தையில் ரூ.10.27 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகள் எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 415 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,499 ரூபாய்க்கும், அதிகபட்சம் 7,560 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 93 விவசாயிகள் கொண்டுவந்த 415 பஞ்சு மூட்டைகள், 10 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Tags

Next Story