கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் பேரவைக் கூட்டம்

கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் பேரவைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலா் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயலாட்சியா் ஆழ்வாா்குமாா் தலைமை வகித்தாா். கணக்காளா் மாரிப்பாண்டி வரவேற்றாா். செயலா் ரமேஷ் அறிக்கை வாசித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சங்க உறுப்பினா்களுக்கு பங்கு ஈவுத்தொகை, இனிப்பு, நினைவுப் பரிசுகள் வழங்கிப் பேசினாா். சங்கத்தின் 2022-23ஆம் ஆண்டின் இறுதித் தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபப் பிரிப்பு, 2024, 2025ஆம் ஆண்டுகளுக்கு உத்தேச வரவு- செலவுத் திட்ட அங்கீகாரம், சங்கத்தின் சிறப்பு துணை விதி திருத்தம், தலைவா்-உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன், காவல் துறை அமைச்சுப் பணி நிா்வாக அதிகாரிகள் குமாா், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலகக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள், சங்க உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story