வெள்ள நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கிய கவுன்சிலர்

வெள்ள நிவாரணமாக ரூ.1 லட்சம்  வழங்கிய கவுன்சிலர்

திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி தனது சொந்த பணம் ரூ.1 லட்சத்தை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் நிவாரணமாக வழங்கினார்.

திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி தனது சொந்த பணம் ரூ.1 லட்சத்தை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் நிவாரணமாக வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த வாரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,தென்காசி, ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆறு உள்பட பல்வேறு ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

இருந்தாலும் பெரும்பாலான மக்கள் உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்கள், பொது நலஅமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் தங்களுடைய சொந்த பணத்தில் உணவு பொட்டலங்கள், ரொட்டி மற்றும் ரஸ்க், நாப்கின்ஸ் மெழுகுவர்த்தி தண்ணீர் பாட்டில்கள் உள்பட பல்வேறு பொருட்களை மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வருகிறனர். இதனை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தொண்டர் அணி தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலருமான அயோத்தி தனது சொந்த பணம் ரூபாய் 1 லட்சம் ரொக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் நிவாரணத் தொகையாக வழங்கினார்.

Tags

Next Story