நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

ராஜபாளையம் நகர் மன்ற கூட்டத்தை காலையில் நடத்துவதாக அறிவித்துவிட்டு மாலையில் நடத்தியதால் அதிமுக, திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் இராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு ஆழ்துளை கிணறுகள் மின் மோட்டாரை சரி செய்வது . அம்மா உணவகத்தை பராமரிப்பது உள்ளிட்ட 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று நடைபெற்ற கூட்டம் காலையில் நடத்துவதாக நகராட்சி சார்பில் அஜந்தா கவுன்சிலருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் திடீரென கூட்டத்தை மாலை நடத்துவதாக ஒத்தி வைத்ததால் அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏன் காலையில் கூட்டம் நடத்த அறிவித்துவிட்டு மாலையில் மாற்றினீர்கள் என அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் காலையில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் இரு வேறு பேரூராட்சிகளில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் இரண்டு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இருந்ததால் காலையில் கூட்டத்தை வைக்க முடியவில்லை என பதில் அளித்தார். உடனடியாக அதிமுக கவுன்சிலர்கள் அமைச்சர்கள் வந்தால் கூட்டத்தை மாற்றி வைக்கலாமா எனவும் அவ்வாறு கூட்டத்தை மாற்றி வைக்க சுற்றறிக்கை அனுப்பவில்லை எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 12 வது வார்டு கவுன்சிலர் திருமலை குமார்நகர்மன்ற கூட்டம் நடக்கும் இடத்தில் உள்ள மேஜையில் ஓங்கி அடித்தவாறு எங்கள் விருப்படி தான் நடத்துவோம் என கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு சமயம் வாக்குவாதம் முக்கிய நிலையில் நகர்மன்ற தலைமை பவித்ரா ஷியாம் இத்துடன் கூட்டம் நிறைவுற்றதாக பாதியிலேயே கூட்டத்தை முடித்து வைத்தார். இதன் காரணமாக மற்ற வாடு கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூற முடியாமல் முணுமுணுத்த படி நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

Tags

Next Story