ஏற்றக்கோடு ஊராட்சியில் 2வது நாளாக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஏற்றக்கோடு ஊராட்சியில் 2வது நாளாக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் 
குமரி மாவட்டம் ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட வியன்னூர் துணை மின்நிலையம் முன்பாக அமைந்திருந்த நிழற்குடை கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடைந்துவிழுந்தது .இதையடுத்து புதிய நிழற்குடை அமைக்க 3லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டு, அதற்கான ஆணையை திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மூலம் கடந்த 10ஆம் தேதி ஏற்றக்கோடு ஊராட்சி மன்றத்திற்கு அனுப்பியதாக தெரிகிறது. எனினும் 18 நாட்களாக நிழற்கூட பணிக்கான டென்டர் ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில்போடபட்டது இந்நிலையில் அமைச்சர் மனோதங்கராஜின் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலும் நிழற்குடை அமைப்பதற்கு நிதி ஒதுக்கபட்டது. இதையடுத்து நிழற்குடை பணிகளை துவங்காததை கண்டித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செலின்மேலி தலைமையில் ஏற்றக்கோடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று இரவும் போராட்டம் நீடித்தது.

Tags

Next Story