கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 மேட்டூரில் நடந்த கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

மேட்டூரில் நடந்த நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாவட்டம்,மேட்டூர் நகராட்சியில் திமுக 20, அதிமுக 5,வி.சி 1 , சுயேட்சைகள் 4 என மொத்தம் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் சந்திரா (திமுக) தலைமையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் மேட்டூர் நகராட்சியில் போதிய வருவாய் இல்லாததால் நகர்மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கு கொண்டுவரப்பட்ட தீர்மானம் கடந்த அக்டோபர் மாதம் நிராகரிக்கப்பட்டது. கவுன்சிலர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாற்றி நகர் மன்ற தலைவர் சந்திரா விதிமுறைகளுக்கு மாறாக எழுதி கையொப்பம் இட்டதாக தெரிவித்து அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story