ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்

ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை மையத்தில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கான சந்தேகங்கள் குறித்து வல்லுனர்களுடன் கேட்டு தெரிந்து கொண்டு, ஆலோசனை உதவிகளை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை மையத்தில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கான சந்தேகங்கள் குறித்து வல்லுனர்களுடன் கேட்டு தெரிந்து கொண்டு, ஆலோசனை உதவிகளை பெற்று வருகின்றனர். 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் 8072918467, 7598510114, 8838945343 மற்றும் 9597069842 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம். இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு 8754271045 எண்ணிலும், காரியாபட்டி ஒன்றியத்திற்கு 9789560011 எண்ணிலும், நரிக்குடி ஒன்றியத்திற்கு 9488501938 எண்ணிலும், இராஜபாளையம் ஒன்றியத்திற்கு 9788396946 எண்ணிலும், சாத்தூர் ஒன்றியத்திற்கு 7010762308 எண்ணிலும், சிவகாசி ஒன்றியத்திற்கு 9500205414 எண்ணிலும், திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு 8220846444 எண்ணிலும், திருச்சுழி ஒன்றியத்திற்கு 9944762424 எண்ணிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு 9443669462 எண்ணிலும், விருதுநகர் ஒன்றியத்திற்கு 9488988222 எண்ணிலும் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மாவட்டத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story