கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கு: போலீசார் கடும் எச்சரிக்கை
ஈரோடு கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடர்புடையவர்களை அழைத்து மதுவிலக்கு போலீசார் கடும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஈரோடு கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடர்புடையவர்களை அழைத்து மதுவிலக்கு போலீசார் கடும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து பலர் பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக விழுப்புரம்,புதுச்சேரி,சேலம் உள்ளிட்ட மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு காவல்துறையினர் ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடர்புடையவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து தற்போதும் கள்ளச்சாராயம் தயாரிப்பு செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என விசாரணை நடத்தினர்.மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சல் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன்.,வட்டாட்சியரிடம் நன்டத்தை சாண்றிதழ் பெற்று காவல்நிலையத்தில் கொடுக்குமாறு மதுவிலக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
Next Story