ஓட்டு எண்ணும் மையப் பணிகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு !

ஓட்டு எண்ணும் மையப் பணிகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு !

கலெக்டர் ஷ்ரவன்குமார் 

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி(தனி), ஆத்துார்(தனி), கெங்கவல்லி(தனி), ஏற்காடு(தனி) ஆகிய சட்டசபை தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.

இந்த ஓட்டு எண்ணும் மையத்தில், சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள், ஓட்டு எண்ணும் அறைகள், வேட்பாளர்கள், முகவர்கள் பாதைகள் மற்றும் அமரும் இடம், மேசைகள், நாற்காலிகள் அமைத்தல், தடுப்புக் கட்டைகள் அமைத்தல், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம், மின்சார வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story