சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க நகைகளை கணக்கிடும் பணி

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க  நகைகளை கணக்கிடும் பணி

சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க நகைகளை கணக்கிடும் பணி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில் நடைபெற்றது.

சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க நகைகளை கணக்கிடும் பணி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 2021-2022 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் மானிய கோரிக்கையின் போது ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் கடந்த 10 வருடங்களாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க நகைகள் கோவிலுக்கு தேவைப்படுவைகள் தவிர, கோவிலுக்கு பயன்படுத்த இயலாத தங்கங்களை மும்பையில் உள்ள அரசு தங்கம் உருக்கு ஆலையில் உருக்கி சொக்க தங்கமாக மாற்றப்படும். அவ்வாறு மாற்றப்பட்ட தங்கம் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சேலம் கோட்டை மாரியம்மனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் மற்றும் நகைகள் கணக்கிடும் பணி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தொரைசாமி ராஜு முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், கோட்டை மாரியம்மனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக 5 கிலோ 190 கிராம் தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இந்த நகைகளில் உள்ள கற்கள், அரக்கு அழுக்கு போன்றவற்றை நீக்கி நிகர தங்கங்கள் தரம் பார்த்து எடை போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்றனர்.

கணக்கெடுப்பு பணியின் போது அறநிலையத்துறை துறை இணை ஆணையர் சபர்மதி, துணை ஆணையர் விமலா, செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பு பணி இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.

Tags

Next Story