கோயில்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை காணிக்கை  எண்ணும் பணி

கோயில்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை காணிக்கை  எண்ணும் பணி

 காணிக்கை  எண்ணும் பணி

கோயில்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை காணிக்கை  எண்ணும் பணி
அறநிலையத்துறை கோயில்களில் வருடத்திற்கு இரண்டு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்படும் முறை துவங்கி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் குமாரகோவில் முருகன் கோவில், நாகராஜா கோவில் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இரு கோயில்களிலும் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள 11 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் உண்டியல்கள் என்னும் பணி நடந்தது. இதில் ரூ. 4 லட்சத்தி 28 ஆயிரத்து 11 ரூபாய் காணப்பட்டது. நான்கரை கிராம் தங்கமும், 78 கிராம் வெள்ளி இருந்தது. இதே போல் குமாரகோவில் முருகன் கோயிலிலும் நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. இதில் ரூ. 4 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் 13 கிராம் தங்க நகைகள், 48 கிராம் வெள்ளி நகைகள் காணப்பட்டன.

Tags

Next Story