நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
விசைப்படகு மீனவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் தென் மாவட்ட மீனவர்கள் கடற்கரை பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் தூரம் வரையிலான பகுதிக்கு உள்ளேயே சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடிய 12 நாட்டிக்கல் தூரத்தின் அருகே விசைப்படகில் வந்து தினமும் மீன் பிடித்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்லும்போது அவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்துதூத்துக்குடிமாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மீன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story