நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது - வனத்துறையினர் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் குன்னூர் பீட்டிற்கு உட்பட்ட சேசபுரம் பகுதியில் வனவர் பழனிசாமி, வனக்காப்பாளர் பொன் பிருந்தா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நெற்றி லைட் மற்றும் கையில் துப்பாக்கி உடன் வந்த நபர் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்த தோட்டத்திற்குள் சென்று தப்பி ஓடியுள்ளார் . தோட்டத்தில் சோதனை செய்த போது, வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கி, 2 நெற்றி லைட்டுகள், வெடி மருந்துகள் அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதுகுறித்து தோட்ட உரிமையாளரிடம் விசாரித்த போது, வ.புதுப்பட்டி ஆர்.சி.தெருவை சேர்ந்த ராயப்பன் மகன் அந்தோணி சுரேஷ்(35) என்பவர் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பி ஓடியதாக தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் அந்தோணி சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வேட்டையாடப் பயன்படுத்துவதற்கு தேவையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை என்பது தீவிரப்படுத்தபட்டுள்ளது.