ஈச்ச மர கள் இறக்கிய முதிய தம்பதி கைது

X
கைது
காஞ்சிபுரம் அருகே ஈச்ச மரங்கள் இறக்கிய தம்பதியர்கள் கைது.
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், கள் விற்பனை துவங்கியிருப்பதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான மதுவிலக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு நேற்று சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஈச்ச மரத்தில் குடுவைகள் கட்டி, அதிலிருந்து கள் இறக்கி, போதைக்காக ரசாயனம் மற்றும் மைதா போன்றவை கலந்து விற்பனை செய்து வந்துள்ளனர். கள் இறக்கும் பணியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், 75, மற்றும் செல்லத்தாயி, 70, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை கள் இறக்கும் பணிக்கு அழைத்து வந்த, நில உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியோர் தம்பதியை சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட, 300 லிட்டர் கள் அப்பகுதியில் அழிக்கப்பட்டன.
Next Story