கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து பணம் பறித்த தம்பதி கைது

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து பணம் பறித்த தம்பதி கைது

கைது செய்யப்பட்ட ஐயப்பன், கங்கா கௌரி

திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என சட்டவிரோதமாக கண்டறிந்து பணம் பறித்து வந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர் பகுதியில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து பணம் பறித்து வந்ததாக மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பெயரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன்(29) மற்றும் அவருடைய மனைவி கங்கா கௌரி(27) ஆகிய இருவரும் பசுமை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருப்பத்தூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா பரிசோதித்து கூறிவந்ததும் மேலும் அவர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக மருத்துவ குழுவினர் முன்னிலையில் ஜோலார்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறியும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக திருப்பத்தூர் பகுதியில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக்கூறி வந்த கணவன் மனைவியை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story