குமரி : கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி.

X
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் மதுரையை சேர்ந்த மாரியப்பன் (55) - சித்ரா (50) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகன் மாதேஸ்வரன் (23). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பாக்கியராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் மாரியப்பன் மனமடைந்து காணப்பட்டார்.இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டிற்கு கடன் கொடுத்த சேர்ந்த வாலிபர் வந்துள்ளார். வீட்டின் கதவு வழியாக பார்த்தபோது மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
