புயல் நிவாரண உதவிக்கு ஓய்வூதியத்தொகையை வழங்கிய தம்பதியினர்

புயல் நிவாரண உதவிக்கு ஓய்வூதியத்தொகையை வழங்கிய தம்பதியினர்

புயல் நிவாரண உதவிக்கு ஓய்வூதியத் தொகையை வழங்கிய தம்பதியினர்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ஒருமாத ஓய்வூதியத்தொகையை வழங்கிய தம்பதியினர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தங்களின் ஒருமாத ஓய்வூதிய தொகையான தலா ரூ.60,000 வீதம், ரூ.1.20 லட்சத்தை காசோலையாக மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகத்திடம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் அன்னை பருவதம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நிறுவனர்கள் சிவகணேசன் மற்றும் பருவதம்மாள் வழங்கினார்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், அன்னை பருவதம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனர்கள் சிவகணேசன் மற்றும் பருவதம்மாள் தங்களது ஒருமாத ஓய்வூதியமான தலா ரூ.60,000 வீதம் மொத்தம் ரூ.1,20,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரியைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைகள் தர்ஷன், யஷ்வந்த் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் உண்டியலில் சேமித்து வைத்த உண்டியல் பணம் ரூ.2,402 உண்டியலோடு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்கள். சிறுவர்கள் முதல் முதியோர்கள், வரை மனிதநேயத்துடன் உதவிசெய்ய முன்வந்ததற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மனதார பாராட்டினார்கள்.

Tags

Next Story