தம்பதியினர் தற்கொலை முயற்சி-பெண் மரணம் கணவர் உயிர் ஊசல் !

தம்பதியினர் தற்கொலை முயற்சி-பெண் மரணம் கணவர் உயிர் ஊசல் !

தற்கொலை

சுங்கச்சாவடி அருகே காரை இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தாங்கள் வாங்கி வந்த விஷத்தை சாக்லெட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதியினர் பெண் மரணம்.

கோவை:கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்தவர் மனோகரன்-சுமதி தம்பதியினர்.இவர்களது இரண்டு மகள்களில் ஒருவர் மருத்துவ படிப்பு முடித்து திருமணமான நிலையில் தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகிறார்.

இளைய மகளுடன் மனோகரன் மற்றும் சுமதி தம்பதியினருடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர்.மனோகரன்-சுமதி தம்பதியினர் சவுரிபாளையம் மற்றும் சேரன் மாநகர் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மனோகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவருக்கு கடன் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தம்பதியினர் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று வழக்கம் போல் உணவகத்திற்கு சென்ற மனோகரன் மதியம் வீடு திரும்பியவர் சேலம் செல்வதாக கூறிவிட்டு தம்பதியினர் இருவரும் காரில் சென்றுள்ளனர்.

கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே காரை இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தாங்கள் வாங்கி வந்த விஷத்தை சாக்லெட்டில் நனைத்து சாப்பிட்டுள்ளனர்.சிறிது நேரத்தில் சுமதி உயிரிழந்த நிலையில் மனோகரன் உயிருக்கு போராடி உள்ளார்.அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை கண்டு சுங்கச்சாவடியில் மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்ற மருத்துவ குழுவினர் இருவரையும் பரிசோதித்து பார்த்ததில் சுமதி ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.ஆபத்தான நிலையில் இருந்த மனோகரனை மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக மனோகரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது.

விசாரணையில் கடன் பிரச்சனை மற்றும் உடல் நல கோளாறு காரணமாக இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.இந்த காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story