கொரியர் நிறுவன ஜன்னல் கதவை உடைத்து திருட்டு
திருட்டு நடந்த நிறுவனம்
விருதுநகரில் தனியார் கொரியர் நிறுவனத்தில் ஜன்னல் கதவை உடைத்து அலுவலகத்தில் இருந்த 45 ஆயிரம் பணம் திருட்டு*
விருதுநகரில் தனியார் கொரியர் நிறுவனத்தின் ஜன்னல் கதவை உடைத்து அலுவலகத்தில் இருந்த ரூ.45 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் முத்துராமலிங்கம் நகரைச் சார்ந்தவர் வினோத்குமார் வயது ( 28 ) இவர் பிரபல தனியார் கொரியர் நிறுவனத்தில் விருதுநகர் டீலராக பொறுப்பு வகித்து வருகிறார்.நேற்று தனது அலுவலகத்தில் உள்ள லாக்கரில் இரவு 45 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வைத்துவிட்டு அந்த சாவியை அலுவலகத்தில் வேறு ஒரு இடத்தில் வைத்து சென்றுள்ளார். இன்று காலை அலுவலகத்தில் வந்து பார்த்த போது அலுவலகத்தின் ஜன்னல் உடைக்கப்பட்டு சாவியின் மூலம் அலுவலக லாக்கர் திறக்கப்பட்டு அதிலிருந்து 45 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இந்த சம்பவம் குறித்து ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த ஊரக காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story


