துறையூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.
ஆர்ப்பாட்டம்
துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் உத்திராபதி தலைமையில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்ட மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் சசிகுமார் துணைத்தலைவர் கவின் குமார் பொருளாளர் ஜோதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நிர்மல், பாகிரதி, எம் கண்ணன். பி.கண்ணன், பி. பாஸ்கரன், எம். பாஸ்கரன், ரஞ்சித், கௌசிகன், ரம்யா, கௌரி, வித்யாலட்சுமி, அறிவழகன், ரெங்கராஜ், மற்றும் முருகேசன் சுரேஷ்குமார் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் கோகிலா முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் விவேக் ராஜா உள்பட வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்
Next Story