கனிமவள பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்ற நீதிமன்ற உத்தரவு

கனிமவள பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்ற நீதிமன்ற உத்தரவு

கனிமவள பாதுகாப்பு சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கனிமவள பாதுகாப்பு சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தாமிரபரணி மருதூர் கீழக்கால் பெருங்குளம் நீரை பயன்படுத்துபவர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சுடலை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:- ஏரல் பகுதியில் 188 ஏக்கர் பரப்பளவில் பெருங்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்து நீரை நம்பியே அந்த பகுதியின் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த குளத்தில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் அள்ள 2 தனி நபர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உரிமம் வழங்கியுள்ளார். இந்த மண் அரசு விதிப்படி விவசாய பயன்பாட்டுக்காக மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் அந்த தனி நபர்கள் ஏற்கனவே போலி பட்டாக்கள் மூலம் மணல் குவாரி நடத்த அனுமதி பெற்று விதிமீறிலில் ஈடுபட்டவர்கள். இவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட கனிம வள உதவி இயக்குனர், ஏரல் தாசில்தார், பெருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். விதி மீறி வழங்கப்பட்ட அனுமதிக்கான காலமும் முடிந்து விட்டது. இருப்பினும், இனி வருங்காலங்களில் பெருங்குளத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், நீர் ஆதாரத்தை சிதைக்கும் வகையில் மண் அள்ள அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, மண் அள்ள வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மண்ல்அள்ள உரிமம் வழங்கும் போது கனிம வள பாதுகாப்பு சட்ட விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளன வழக்கை முடித்து வைத்தனர்.

Tags

Next Story