நகை கொள்ளை குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்

நகை கொள்ளை குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கொள்ளையன் விஜய்

கோவை: காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கடந்த 27ம் தேதி 5.15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கபட்டது.ஐந்து தனிப்படைகள் அமைக்கபட்டு கொள்ளை சம்பவத்தில் உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யபட்டு அவர்களிடம் இருந்து நகைகள் மீட்க்கபட்டன. கொள்ளை சம்பத்தில் முக்கிய குற்றவாளியான விஜய் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் அவரை கைது செய்தனர். நேற்று கோவைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விஜயை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா உத்தரவு பிறபித்தார்.

Tags

Next Story