கவரிங் நகைக்கடை பெண் ஊழியர் செல்போன் திருட்டு
செல்போன் திருட்டு
கடையில் பணிபுரியும் பெண் ஊழியரின் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள்!
கோவை பெரிய கடை வீதியில் காவ்யா கோல்ட் கவரிங் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று பொருட்கள் வாங்கவந்த நபர் ஒருவர் கடையில் சார்ஜ் போடப்பட்டிருந்த பெண் ஊழியரின் செல்ஃபோனை தூக்கிப்பையில் போட்டுக் கொண்டு சென்றார். பின்னர் தான் வாங்கிய பொருளுக்கு காசை கொடுத்துவிட்டு கடையில் இருந்து வேகமாக வெளியேறினார் இந்நிலையில் கடையிலிருந்து பெண் ஊழியர் சரண்யா சார்ஜ் போடப்பட்ட தனது செல்போனை தேடிய பொழுது செல்போன் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்பொழுது கடைக்கு வந்த நபர் செல்போனை திருடி கட்டைபைக்குள் தூக்கி போட்டு கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.இது குறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story