50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை
பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக  மீட்டனர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் .இவர் மாத்தூர் பெருமாள் கோயில் அருகே விவசாய நிலத்தில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த சுமார் 50 அடி ஆழம் உள்ள தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்தது.உடனே அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்பு நிலை அலுவலர் பாலநாகராஜ் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட வத்திராயிருப்பு தீயணைப்பு துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story