பேராவூரணி அருகே கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு: உயிருடன் மீட்பு

பேராவூரணி அருகே கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு: உயிருடன் மீட்பு

மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து மீட்டனர்.

பேராவூரணி அருகே 70 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை உயிரை பணயம் வைத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பசுமாட்டை உயிருடன் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கிராமத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் ஆனைகட்டி கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரமனோகர், இவரது மனைவி சிவபாக்கியம். இவர் பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்ற அவரது பசு மாடு வீடு திரும்பவில்லை.

இதை தொடர்ந்து சிவபாக்கியம் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தபோது, அங்கிருந்த 70 அடி ஆழக் கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்து கத்திக் கொண்டிருந்தது. இது குறித்து கிராமத்தினர் உடனடியாக பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ரஜினி தலைமையில்,

சுப்பையன் உள்ளிட்ட நான்கு தீயணைப்பு வீரர்கள், ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கி, கயிறு கட்டி, நீண்ட போராட்டத்துக்கு இடையே பசு மாட்டை பத்திரமாக மீட்டு தரைக்கு கொண்டு வந்தனர். பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கிராமத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Tags

Next Story