தளிவாசலில் மாடு மாலை தாண்டு விழா

தளிவாசலில் மாடு மாலை தாண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள தளிவாசல் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ ராணியம்மாள் திருவிழாவை முன்னிட்டு, இன்று சிறப்பு பூஜை மற்றும் ஆராதனையும், பாரம்பரிய இசை நடனமும் நடைபெற்றது. பின்னர் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் கடந்த ஐந்து நாட்களாக விரதம் இருந்து, இன்று அவர்கள் வளர்த்து வரும் எருதுகளுக்கு கோவில் வளாகத்தில் பூஜை செய்து, மாலை தாண்டும் விழாவுக்கு தயார்படுத்தினர். அப்போது எருதுகள் ஒன்று கொண்டு போட்டி போட்டுக் கொண்டு மாலை தாண்டு விழாவில் பங்கேற்ற காட்சி காண்போரை பரவசமடைய செய்தது.

Tags

Next Story