குடிநீர் தொட்டியில் மாட்டுசானம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கடந்த மாதம் 25ஆம் தேதி கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் மாதிரியே சேகரித்த ஊரக வளர்ச்சி துறை அதனை திருச்சியில் உள்ள குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பினர். பரிசோதனையின் முடிவுகளில் அந்த குடிநீரில் மாட்டுச்சாணம் உள்ளிட்ட எந்தவித கிருமிகளும் கலக்கப்படவில்லை எனவும் அந்த நீர் குடிக்க உகந்த நீர் எனவும் கடந்த மாதம் 29ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்தன.
இருந்த போதிலும் இந்த விவகாரத்தில் காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் ஒரு தலைப்பட்சமாக விசாரித்துள்ளனர் என்றும் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி நீதிபதிகள் கடந்த புதன்கிழமை 15 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள சிபிசிடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சண்முகம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிஎஸ்ஆர் பதிவு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அளித்த புகார் அடிப்படையில் ஒரு சிஎஸ்ஆர் பதிவும் செய்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் படி குருவண்டான் தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையில் சிபிசிஐடி டிஎஸ்பி சதீஷ்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பொதுமக்களிடையே தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் குறுவாண்டான் தெருவில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற உத்தரவுபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை உள்ளதா சாதிய பாகுபாடுகள் உள்ளனவா என்பதையும் சோதனையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது