நாட்றாம்பள்ளி அருகே பசுமாடுகள் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாட்றாம்பள்ளி அருகே பசுமாடுகள் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உயிரிழந்த மாடுகள்

நாட்றாம்பள்ளி அடுத்த முத்துராயர் கோவில் மேடு பகுதியில் கம்பி வேலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசு மாடுகள் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தன.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கநத்தம் முத்துராயர் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த பலராமன் இவரது மனைவி வெண்ணிலா பலராமன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னாள் உயிரிழந்து விட்டார் வெண்ணிலா இவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலத்தின் அருகே கிரானைட் கம்பெனி செயல்பட்டு வருகிறது இந்த கம்பெனியின் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது அந்த கம்பி வேலி அருகில் வெண்ணிலா தனது 2 பசு மாடுகளை கட்டி வைத்துள்ளார்.

திடீரென்று இரண்டு மாடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது இதை குறித்து வருவாய்த்துறையினர் தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிட்டுத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story