வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மாடுகள் - கண்டுகொள்ளாத பேரூராட்சி
வாகன போட்டியை கீழே தள்ளிய மாடுகள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் நகர்புற கடைவீதியில் கோவிலுக்கு நேத்திக்கடனாக விடப்பட்ட 100க்கும் மேற்பட்ட கோவில் காளை மாடுகள் பேருந்து நிலையத்திலும், கடைவீதியில் சுற்றி திரிகின்றன. அடிக்கடி காளைகள் சன்டை போடுவதால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில் நகரின் மையப் பகுதியில் நெடுஞ்சாலை நடுவே இரண்டு காளைகள் கண்மூடித்தனமாக ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு சண்டை போட்டன, மாடுகள் கண்மூடித்தனமாக சண்டை போடும்போது சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை முட்டி சேதப்படுத்தியது , மேலும் கடைவீதிகள் இருந்த வியாபாரிகள் மாட்டின் மீது தண்ணீரை ஊற்றி சாந்தப்படுத்த முயற்சிசெய்தனர் இருப்பினும் மாடுகள் சாந்தப்படவில்லை, தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில் அதன் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கேஸ் சிலிண்டர் விநியோகிப்பாளர் மீது இரண்டு மாடுகளும் மோதியதில் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காப்பாற்றினர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கபட்ட இருசக்கர வாகனங்களை சேதபடுத்தியது. மேலும் மாடு மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது
Next Story