நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்ட ஆவின் பால்!
புதுக்கோட்டையில் நடமாடும் கால்நடை மருந்தக வாகனம் மூலம் ஆவின் பால் வினியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டையில் ஆவின் பால் வினியோகம் கால்நடை மருந்தக வாகனம் மூலம் சப்ளை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி! நடமாடும் புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சரியான நேரத்திற்கு பால் சப்ளை செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானது இதனையடுத்து ஆவின் நிர்வாகம் அவசர அவசரமாக நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் அந்தந்த பால் பூத்துகளுக்கு ஆவின் பால்கள் சப்ளை செய்தது பொதுவாக ஆவின் பால் நிறுவனத்தின் வாகனம் மூலமாக தான் பால் சப்ளை செய்வது வழக்கம் ஆனால் பணியாளர் குறைபாடா அல்லது வாகனத்தில் ஏதேனும் பிரச்சினையா? என்று தெரியவில்லை அதே நேரத்தில் வாகனம் பழுது என்றால் வேறு தனியார் வாகனம் மூலம் பால் சப்ளை செய்திருக்கலாம் ஆனால் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் பால் செய்யப்பட்டது பொதுமக்களிலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது ஏனென்றால் அந்த வாகனத்தில் பல்வேறு வகையான கால்நடை மருந்துகள் வைத்திருப்பார்கள் அதன் தாக்கம் பாலின் மீது பட்டு ஏதேனும் விபரீதம் நடக்குமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஒரு வித அச்சத்தினுடைய பாலை வாங்கி சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆவின் நிறுவனத்தின் வாகனம் மூலம் பால் சப்ளை செய்யப்படாமல் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் பால் சப்ளை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story